Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

திருமலையில் கொரோனா! பொய் வதந்திகளை நம்ப வேண்டாம். மாகாண பணிப்பாளர் ஏ.லதாகரன்

 

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை- நிலாவெளி பிரதேசத்தில் கொரோனா தொற்றுள்ள நோயாளி ஒருவர் இனங் காணப்பட்டுள்ளதாக  சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கிழக்குமாகாண சுகாதார பணிப்பாளர்  ஏ.லதாகரன் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிலாவெளி பிரதேச வைத்தியசாலையில் 72 வயதுடைய நபர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை சிலர் கொரோனா தொற்று காரணமாக இவரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் நாளை சனிக்கிழமை 2 மணிவரை வைத்தியசாலை மூடப்பட்டு இருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் போலியான வதந்திகளை  பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பற்றிய தகவல்களை பொதுமக்களுக்காக சட்டபூர்வமாக தெரியப்படுத்துவதற்காக கிழக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும்  பொது மக்களுக்கு சிறந்த தகவல்களை வழங்க உள்ளதாகவும் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் மாகாண பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பிராந்திய சுகாதார பணிப்பாளர்களுக்கு கொரோனா பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிக்குமாறு கோரிக்கை  விடுத்துள்ளதாகவும் மக்கள் சுகாதார திணைக்களம் சுகாதார அமைச்சு விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடக்குமாறும் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.லதாகரன் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments