Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

ஹொரவ்பொத்தான, நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அடிக்கல் நாட்டு விழா

 


(அப்துல்சலாம் யாசீம்)


ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நிக்கவெவ முஸ்லிம் வித்தியாலயத்தில் இரண்டு மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (24) இடம்பெற்றது. 

குவைட் இஸ்லாமிக் கெயா சொசைட்டி நிறுவனத்தின் நிதி உதவியுடன் அல் ஹிமா சமூக சேவை அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி அல்ஹாஜ் அஷ்சேஹ் எம். ஏ. ஏ. நூறுல்லாஹ் (நளீமி) அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. 


வடமத்திய மாகாணத்தில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இந்த அமைப்பினால் பாரிய வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் இப்பாடசாலையில் அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்றதாகவும் மேலும் இப்பாடசாலையின் நூலக பற்றாக்குறை காணப்படுவதாகவும் இதனை எதிர்காலத்தில் புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவ்வமைப்பின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார். 


இதேவேளை இன ஒற்றுமையை வலுவூட்டுவதற்காக சிறிய வயதிலிருந்தே அதாவது பாலர் பாடசாலை தொடக்கத்திலிருந்தே ஒற்றுமைகளையும் நல்லிணக்கத்தையும் கலாச்சாரம் பற்றிய விழுமியங்களையும் மாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் மற்றைய கலாச்சாரங்கள் மதங்களை மதிக்கக் கூடிய விதத்தில் மாணவர்களை வழி நடாத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 


இந்நிகழ்வில் ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம். எச். எம். யூசுப் முக்தி, ஹொரவ்பொத்தான பிரதேச சபை உறுப்பினர் என். எம். பாசில், சமூக சேவையாளர் ஏ. எம். சியாம் ஹாஜியார் மற்றும் ஆசிரியர்கள், அதிபர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


 

No comments