திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் பாடசாலைகளுக்கு கை கழுவும் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

 


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தில் பின்தங்கிய பாடசாலைகளுக்கு கை கழுவும் இயந்திரங்கள் இன்று  (16) வழங்கி வைக்கப்பட்டது. 

மனிதநேய உதவி நிறுவனத்தினால் மெடிக்கல் ரிலீப்  இன்டர்நேஷனல் அமைப்பின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  வடக்கு கல்வி வலயத்தில் 11 பாடசாலைகளுக்கு கைகழுவும் இயந்திரங்கள் (HAND WASHING STATIONS) அவ் அமைப்பின் பணிப்பாளர் டி.எம்.ஜறூக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. 

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பாடசாலைகள் மட்டத்தில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் பாடசாலைகளுக்கு கை கழுவும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் எதிர்காலத்தில் கோமரங்கடவல, மொரவெவ பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு கட்டில் நடவடிக்கைகளுக்கு உதவிகளை வழங்க உள்ளதாகவும் இதன் போது அதன் பணிப்பாளர் தெரிவித்தார்.


இத்திட்டத்தின் ஊடாக இன மத பாகுபாடின்றி அனைவரும் சமம் என்ற நோக்கில் பல முன்னேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார். 

இந்நிகழ்வில் திருகோணமலை வடக்கு கல்வி வலயத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கே. பி. சி. கே. பியலத் கோமரங்கடவல கோட்டக்கல்வி அதிகாரி சுமன சார தேரர் மற்றும் மனிதநேய உதவி நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஏ. எம். முர்சித், பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எம். எம். அன்சாரி, திட்ட முகாமையாளர் எம். எம். தமீம் பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.