திருகோணமலையில் இரத்ததான நிகழ்வு

 

(அப்துல்சலாம் யாசீம்) 


திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இரத்ததான நிகழ்வொன்று இன்று (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


திருகோணமலை மாவட்ட சர்வசமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை எகெட் கரித்தாஸ் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 


 உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக சமீபகாலமாக இரத்ததான முகாம்கள் இடம் பெறவில்லை எனவும் இதனால் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இரத்தத்திற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது நிலையில் இவ்வாறான  இரத்ததான நிகழ்வுகளை  ஏற்பாடு செய்வதினால் பலர் நன்மை பெற்று வருவதாகவும் இரத்த வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


இன்றைய இரத்ததான நிகழ்வில்  சுமார் 54 இரத்த வழங்குனர்கள் குருதியை நன்கொடை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.