சிறிலங்கா சர்வதேச ரீதியில் தோல்வி அடைந்த நாடாக கருதப்படும் என இரா. சம்பந்தன்

(அப்துல்சலாம் யாசீம்)

இந்த நாட்டில் அரசியல் சாசனம் சட்டபூர்வமாக இல்லாத காரணமான நிமிர்த்தம் இந்நிலைமை தொடருமானால் சிறிலங்கா சர்வதேச ரீதியில் தோல்வி அடைந்த நாடாக கருதப்படும் என இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில் நேற்று மாலை (25) இளைஞர் அணியினரின் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கடந்த 65 வருடங்களாக அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் சிங்கள மக்களும் அரசியல் தேர்தல்களில் அரசியல் சாசனத்தை நிராகரித்து வந்துள்ளதாகவும் இரா சம்பந்தன் மேலும் கூறினார் அரசியல் சாசனம் என்பது மக்களுடைய சம்மதத்துடன் மக்களின் ஒப்புதலுடன் மக்களின் இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்தப்பட வேண்டும்.

 ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படை "அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு செயற்படுவதுதான்" எனவும் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.

தற்போது இந்த நாட்டில் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் ஐக்கிய நாடுகள் சபையின் உடைய ஒப்பந்தங்கள் தீர்மானங்களின் அடிப்படையிலும் இலங்கையில் ஒரு அரசியல் சாசனம் இல்லை எனவும் சிறந்த அரசியல் தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு திருகோணமலை மாவட்டத்தில் 90 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்ற நிலையில் நூற்றுக்கு 80 வீதமான தமிழ் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் இரா சம்பந்தன் இதன்போது கோரிக்கை விடுத்தார். 

தமிழ் மக்களுடைய வாக்குகள் பிரிக்கப் படக்கூடாது  எனவும் மாற்று கட்சிகளுக்கு வாக்குகளை அழித்து திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெறக்கூடிய முறையில் தமிழ் பேசும் மக்கள் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டுமெனவும் அனைத்து இளைஞர்களும் ஒன்றிணைத்து மக்களை அறிவூட்டுவதுடன், தெழிவூட்ட வேண்டும் எனவும் இரா சம்பந்தன் இதன்போது கோரிக்கை விடுத்தார். 

இப் பரப்புரைக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.