திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை மரணம்

திருகோணமலை-நிலாவெளி பிரதான வீதி ஆறாம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (13)  மாலை இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து நிலாவெளி பகுதிக்கு சென்று கொண்டிருந்த லொறி முற்சக்கரவண்டியுடன் மோதுன்டதுடன், முற்சக்கர வண்டி  மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் நிலாவெளி, 07ம் கட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ரவூப் என்றழைக்கப்படும் மொஹிதீன்தீன் தௌபீக் (48வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.