கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் விவகாரம் நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள உத்தரவு!

(அப்துல்சலாம் யாசீம்) 

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளராக நிரந்தரமாக எம். ஜ. எம். மன்சூர்   தொடர்ந்தும் கடமை ஆற்ற முடியும் என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று (01) இவ்வழக்கு தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 

2018 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் முதலாம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால்  மாகாண கல்வி பணிப்பாளராக எம். கே. மன்சூர் நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து  2018ம் ஆண்டு பத்தாம் மாதம் மூன்றாம் திகதி அவர் கடமையை பொறுப்பேற்றார். 


இதனை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநராக எம். எல். ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆளுநராக கடமை பொறுப்பேற்றதையடுத்து  2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளராக எம். டி. எம். நிஷாம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்  தனக்கு எவ்வித அறிவுறுத்தலும் வழங்கப்படாமல் தன்னுடைய நியமனத்தை ரத்து செய்து புதிதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம். டி. எம். நிஸாம் நியமிக்கப்பட்டமை தொடர்பில் 2019 இரண்டாம் மாதம் 25ஆம் திகதி திருகோணமலை மேல் நீதிமன்றில் அவரது சட்டத்தரணியான எம். சி. சபறுள்ளாஹ்  ஊடாக மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் 2019ம் ஆண்டு 03ம் மாதம் 05ம் திகதி இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டு தடை உத்தரவு வழங்கப்பட்டு வழக்கு தொடர்ந்தும் நடைபெற்றது. 

இந்நிலையில் இவ்வழக்கு தீர்ப்பிற்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது  கிழக்கு மாகாண ஆளுநர் எம். எல் ஏ. ஹிஸ்புல்லா தன்னிச்சையாகவும் சட்டத்திற்கு முரணாகவும், இயற்கை நீதி கோட்பாட்டிற்கு முரணாகத் செயற்பட்டதாக இதன்போது நீதிபதி திரந்த நீதிமன்றில் சுட்டிக்காட்டினார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget