Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

கிண்ணியாவில் ஹெரோயினுடன் கைது!

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை சேனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று மாலை (02) இடம்பெற்றுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த கிண்ணியா - அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் 30 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.


No comments