கடந்த காலங்கள் தொடக்கம் இன்று வரைக்கும் தமிழ் மக்கள் சார்பான தங்களின் கருத்துக்கள் இனக் குரோதம் கொண்டதாகவும், தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் மனிதநேய மற்ற வகையில் சிங்கள மக்களை தூண்டி அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்வதாக உள்ளது.
தங்களுக்கு இந்த நாட்டின் வரலாறு தெரியாமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் இந்நாட்டு தமிழ் மக்கள் வேதனை அடைய கூடிய வகையில் தொடர்ந்து ஊடகங்களில் பேசிவருகின்றீர்கள்.
நீங்கள் அரசின் பேச்சாளர்.
ஒரு அரசாங்கம் என்பது நாட்டில் வாழும் பல்வேறு இன மக்களுக்கும் உரியது. ஆனால் நீங்கள் அரசின் ஊடக பேச்சாளர் என்ற பதவியை பயன்படுத்தி உங்களின் அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ளுவதற்கும்,அரசியல் இலாபத்திற்காவும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றிர்கள்.
ஒரு அரசாங்கம் என்பது நாட்டில் வாழும் பல்வேறு இன மக்களுக்கும் உரியது. ஆனால் நீங்கள் அரசின் ஊடக பேச்சாளர் என்ற பதவியை பயன்படுத்தி உங்களின் அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ளுவதற்கும்,அரசியல் இலாபத்திற்காவும் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றிர்கள்.
நீங்கள் சிங்கள மக்களிடம் எவ்வளவு பொய்களை சொன்னாலும் அது ஒருகாலமும் உண்மையாகாது. உண்மையில் சிங்கள மக்கள் தமிழரின் கோரிக்களை ஏற்றுள்ளனர். ஆனால் உங்களைப் போன்ற அரசியல் வாதிகள் 70 ஆண்டுகளாக உண்மைகளை மறைத்து அரசியல் இலாபம் தேடும் முகமாக சிங்கள மக்களுக்கு பொய்களை கூறி அவர்களை தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பி விடுகின்றீர்கள்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தாங்கள் தெரிவித்த கருத்துகள் தங்களின் இனக் குரோதத்தத்தை வெளிக்காட்டி இருக்கின்றது,
தமிழ் இனவாதிகள் புலம் பெயர் செயல்பாட்டாளர்கள் விடுதலை புலிகள் இதனை தவிர உங்களுக்கு பேசுவதற்கு வேறு ஒன்றும் தெரியாதா?
புலம் பெயர் தமிழ் மக்கள் பற்றியோ, தமிழ் அரசியல் கடசிகள், மற்றும் வடக்கு கிழக்கு மாகாணம் பற்றியோ, தமிழர் உரிமைகள் பற்றியோ பேசுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
ஏன் என்றால் இதுவரை நீங்கள் அரசாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் ஆக இருந்த காலங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து கூட இல்லை அவர்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வை கூட கூறவில்லை 70 வருடகால போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் அகிம்சை ஆயுதம் என அரசுடன் போராட்டம் நடத்தியுள்ளனர். அதுபற்றியோ அல்லது தீர்வு பற்றியோ நீங்கள் இதுவரை பேசவில்லை.
தற்போது பேசுவது போல் தொடர்ந்து தமிழ் மக்கள் மீது குரோத எண்ணத்துடன் பேசுகின்றீர்கள்.
இவ்வாறான ஒரு நிலையில் நீங்கள் தெற்கின் அரசியல்வாதி
இன்று( தெற்கில்) அங்கு வாழும் சிங்கள மக்கள் அரச வேலை வாய்ப்பு , அபிவிருத்தி, மற்றும் வீடுகள் இல்லாமலும் பல துன்பங்களையும் கஷ்டங்களையும் மாடிவீடு எனும் சிறைகளிலும், சேரிகளிலும், மேன்பாலங்களுக்குகீழும், ரயில் தண்டபாலங்களுக்கு அருகிலும் வாழ்ந்து அனுபவித்து வருகின்றனர். எனவே தாங்கள் முதலில் தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் வாக்களித்த அந்த மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசுங்கள் அதனை முதலில் சரி செய்ய நடவடிக்கை எடுங்கள். அதுவே சிறந்தது ஆகும்.