கொட்டியாபுரபற்று சர்வதேச ஒன்றியத்தினால் வறுமையை ஒழிப்போம் வாழ்க்கையை மேம்படுத்துவோம் எனும் திட்டத்தின் கீழ் திருகோணமலை வெருகல் பிரதேசத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வெருகல் பிரதேச செயலாளர் கே. குணநாதன் தலைமையில் (11) கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட PAMA உதவி பெறும் 650 குடும்பங்களுக்கே இப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
எம். சௌந்தரராஜனின் ஒருங்கிணைப்பில் சர்வதேச புலம்பெயர் நாடுகளில் வாழும் உறுப்பினர்களின் நிதியுதவியுடன் வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு இவ்வாறான உதவிகளை செய்வது எமது பிரதேசத்துக்கு மட்டுமல்லாது மாவட்டத்திற்கும் நன்மதிப்பைப் பெற்று தந்துள்ளதாகவும் இவ்வாறான செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாகும் வெருகல் பிரதேச செயலாளர் கே. குணநாதன் இதன்போது தெரிவித்தார்.
No comments