தனக்குத்தானே தீ மூட்டிய சம்பவம் திருமலையில் பதிவு!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முற்பட்ட வயோதிபர்  திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் இன்று  (30)  பிற்பகல் 
3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்ய முற்பட்டவர் திருகோணமலை-இலிங்கநகர், திருச்செல்வம் வீதியைச் சேர்ந்த மாரிமுத்து வேலாயுதப்பிள்ளை (60 வயது) எனவும் தெரியவருகின்றது.

 குடும்பத்தகராறு காரணமாக கணவர் ஒரு இடத்திலும் மனைவி அவரது உறவினர்  வீட்டிலும் வாழ்ந்து வந்த நிலையில்  மனைவியை தாக்குவதற்காக சென்றபோது தாக்க முடியாமல் போயுள்ளது. 

 இந்நிலையில் கோபம் கொண்ட இவர் கையில் எடுத்துச் சென்ற மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய முற்பட்டதுடன்
காயப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு 1990 அவசர அம்பியூலன்ஸ் வண்டி மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தெரியவருகின்றது. 

குறித்த வயோதிபர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் தற்கொலைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


1 கருத்துகள் இல்லை :

  1. அன்பான எம் உறவுகலெ திருகோணமலை மாவட்டத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தையும் பிரிக்கும் எல்லையாக விளங்கும் எல்லை பிரதேசம்தான் வெருகல் இந்த வெருகல் பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமம்தான் வட்டவன்49 என்பார்கள் இந்த கிராமம் ஒரு பின்தாங்கப்பட்ட கிராமம் ஆகும் இங்கு 150 அளவிளான குடும்பங்கள் உள்ளனர் இதில் ஊனம் உற்றோர் வயோதிபர்கள் பெண்கல் தலைமைதாங்கும் குடும்பங்கள் கொழும்புக்கு வேலைக்காக சென்று சுயதனிமைப் படுத்தப்பட்டவர்கள் என்று பல இன்னல்களுக்கு மத்தியில் எம் மக்களின் அன்றாட தொழில்களான தேன் எடுத்தல். வருவாடு போடுதல். வயல் வேலைக்கு போதல் மேசன் கூலி இவ்வாறான தொழில்களை செய்யும் எம் மக்கள் மிகவும் கஸ்ரப்படுகிறார்கள் இங்கே தேர்தல் காலத்தில் மாத்திரம்தான் அரசியல்வாதிகள் வருகிறார்கள் ஆனல் இவ்வாறான சூழ்நிலைகளில் யாரும் வருவதில்லை ஏன் என்றால் எம் மக்கள் தேர்தல் காலத்தில் எல்லாராலும் ஏமாற்றப் பட்டவர்கள் ❔❔❔
    🌹🌷😪இன்று ஒருவேளை உணவுக்காக எம் மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் இவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட எம் உறவுகள் நீங்கள் முன்வருவீர்களா..❔❔❓❓❓இந்த செய்தியை பதிவிட முடியுமா

    ReplyDelete

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.