திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நிரந்தர ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள்!


(அப்துல்சலாம் யாசீம்) 

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் நிரந்தர   ஊழியர்களின் சேவையை பாராட்டி “Voluntary Organisation for Vulnerable Community Development (VOVCOD) நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு”  என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால்  53 ஊழியர்களுக்கு இன்று (21) உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

ஏற்கனவே தற்காலிக ஊழியர்களின் சேவையை பாராட்டி 18-03-2020  அன்று 65 ஊழியர்களுக்கு  உலர் உணவுப் பொதிகள் வழங்கப் பட்டிருந்தது
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் இடம்பெற்றது. 

இவ் வைபவத்தில் பொது சுகாதார அதிகாரி திரு தவராசா பிரதேச சபையின் செயலாரரும், VOVCOD சார்பில் திரு தர்மலிங்கம் கணேஷ் விபுலானந்த கல்லூரி அதிபர் திரு ஜெரோம் மற்றும் திரு  ச. நடேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.