Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

(Global Ehshan Relief Srilanka வினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு)

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மாவட்டத்தில் ரொட்டவெவ மற்றும் அத்தாபெந்திவெவ கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பென்னி எப்பீல் (Penny Appeal) அவுஸ்திரேலியா நிதியுதவியுடன் Global Ehshan Relief Srilanka அமைப்பினால்  (06) ரொட்டவெவ அஹதிய்யா பாடசாலை வளாகத்தில் வைத்து என். எம். தமீம் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இன மத பேதமின்றி ரொட்டவெவ மற்றும் அத்தாபெந்திவெவ கிராமங்களைச் சேர்ந்த 300 பேருக்கே இப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கொவிட்19 வைரஸ் அசாதாரண சூழ்நிலை காரணமாக மிகவும் கஸ்டத்தில்  தொழிலின்றி வாழ்ந்து வந்த இக்கட்டத்தில்  3500/= பெறுமதியான உலர் உணவு பொதிகள்  வழங்கியமை மக்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இதுவரை வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகளை விடவும், இவ்வமைப்பின் ஊடாக வழங்கிய பொதிகள் குறித்து பொது மக்கள் திருப்தியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இதன்போது Global Ehshan Relief Srilanka அமைப்பின் தலைவர் டி. எம். ஐறூக், செயலாளர் ஏ. எம். முர்சித் மற்றும் மொழி பெயர்ப்பாளரும், சமூக சேவையாளருமான என். எம். தமீம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.




No comments