பல்கலைக்கழகங்கள் 11ம் திகதி திறக்கப்படும்! பாடசாலைகளுக்கு ?


இம்மாதம் 11ஆம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறிப்பிட்ட சில அதிகாரிகள், பணியாளர்களை வேலைக்கு அமர்த்த, பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து இன்னும் அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கவில்லை.

(ஜே.எப். காமிலா பேகம்)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال