திருகோணமலை - உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடமையாற்றும் 5 பொது சுகாதாராகப் பரிசோதகர்கள் கடமைப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சுய தனிமைப்படுத்தப்பட்ட 32 குடும்பங்களுக்குரிய உலர் உணவுப் பொதிகளை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நலன்புரி சங்கத்தினால் (26) அன்று பொது சுகாதாராகப் பரிசோதகர்கள் மூலமாக வழங்கப் பட்டது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் Rs. 1000/= பெறுமதியான பொருட்கள் அவர்களுடைய வீடு வீடாகச் சென்று வழங்கப் பட்டது.