மீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் முழுமையாக சேதமடைந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வீடுகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த 30 குடும்பங்களுக்கு இன்று வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த வீடுகளுக்காக அரசாங்கம் 3920 இலட்சம் ரூபவை செலவிட்டுள்ளது.
மேலும் இந்த வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு தலா இரண்டரை இலட்ச ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டது.
இழந்த விடுகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் செய்து முடிக்கப்பட்டதன் பின்னர் பெறுமதி கூடிய வீடுகளுக்கு மேலதிக தொகையைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.