Page Nav

தலைப்புச் செய்திகள்

latest

214 ஓட்டங்களால் இந்தியா படுதோல்வி : தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 214 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 438 ஓட்டங்களைப் பெற்றனர்.

அவ்வணியின் அம்லா 23 ஓட்டங்களையும், டீ கொக் 109 ஓட்டங்களையும், டூ ப்லெஸிஸ் 133 ஓட்டங்களையும், அணித்தலைவர் டி வில்லியஸ் 109 ஓட்டங்களையும் குவித்தனர்.

439 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் ஏமாற்றத்தையே கொடுத்தனர். அவ்வணி சார்பாக ரோகித் சர்மா, 16 ஓட்டங்களுடனும், கோலி 7 ஓட்டங்களுடனும் ஆட்மிளந்தனர்.

எனினும் சற்று பங்களிப்பு செய்த தவான், 60 ஓட்டங்களையும் ரகானே 87 ஓட்டங்களையும் டோனி 27 ஓட்டங்களையும் பெற்றனர. ஏனைய வீரர்கள் எவரும் பிரகாசிக்கவில்லை. பின்னர் 36 ஓவர்கள் முடிவில் இந்தியா அணி 214 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 4 விக்கெட்டுக்களையும், ஸ்டெயின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாபிரிக்கா 3-2 என்ற வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக டீ கொக்கும், தொடர் நாய்கனாக டி வில்லியஸும் தெரிவானார்கள்.

No comments