அக்காவின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை மரணம் திருமலையில் சம்பவம்!

(அப்துல்சலாம் யாசீம்)

அக்காவின் கையில் இருந்து தவறி விழுந்த  18 மாத குழந்தை திருகோணமலையிலிருந்து கண்டி பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது இன்று (19) அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

இவ்வாறு உயிரிழந்த 18 மாத குழந்தை கிண்ணியா - சூரங்கல் பகுதியைச் சேர்ந்த பாத்திமா நசீமா எனவும் தெரியவருகின்றது. 

இச்சம்பவம் சனிக்கிழமை மாலை கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 


சம்பவம் குறித்து தெரியவருவதாவது-
 18 மாத குழந்தை கதிரையில் உட்கார்ந்திருந்தபோது தன்னுடைய 12 வயது அக்கா தூக்கி கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த போது  தவறுதலாக கீழே விழுந்து மயக்கமுற்ற நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டதையடுத்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொண்டு சென்றபோது  உயிரிழந்துள்ளார். 

இதேவேளை உயிரிழந்த குழந்தையின் சடலத்தை கந்தளாய் அரசினர் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார். 

தற்பொழுது குழந்தையின்  சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.