வெருகலின் அடுத்த படைப்பு

திருகோணமலை வெருகல் பிரதேசத்தில்,சமீப காலமாக இளைஞர்களின் சினிமாத்துறை ஆர்வம் அதிகரித்துவருவதை நாம் அறிவோம் அந்த வகையில் MARCH 08 வெளியான "மறைபுதிர்" குறும்படம் 422 பேரின் பேராதரவுடன் முதல் காட்சியிலேயே  House full ஆக வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர்களின் இரண்டாவது படைப்பை

மல்லிகைத்தீவை பிறப்பிடமாக கொண்ட இலண்டனில் வசிக்கும் கந்தையா இராசநாயகம்,சுவீஸ்சில் வசிக்கும் கந்தையா கோணேஸ்வரன் ஆகிய தொழிலதிபர்களின் தயாரிப்பில்

ஜனாமோகேந்திரனின் இயக்கத்தில்
"ஒற்றைச்சிறகு"  திரைப்படம் உருவாகி வருகிறது, ஓர் தேவதையின் ஒற்றைசிறகின் பயண  வலியில் வென்ற தருணங்களை  அழகாக எடுத்தியம்பும் கதை....

மூதூர்,வெருகல் பகுதியில் உருவாகும் முதல் திரைப்படம் எனும் பெருமையை இத்திரைப்படம்  தட்டிச்செல்கிறது  "ஒற்றைச்சிறகு",
மட்டகளப்பு,திருகோணமலை தொழிநுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகிறது,பிரத்தியேகமாக இருபாடல்களும் ஒலிப்பதிவாகியுள்ளது,இப்படத்திற்கான இசை K.KISHANTH,படத்தொகுப்பு TJ RENUJAN,பின்னணி குரல்பதிவு   "அ" கலையகம்  (மட்டகளப்பு),கதைதொகுப்பு அகல்யா,கிருபா,மக்கள் தொடர்பு தவமுரளி,உதவி இயக்குனர் குஜேந்தன்,கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் ஜனாமோகேந்திரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்,

எந்த எதிர்பார்ப்புமின்றி தயாரிப்பிற்குதவிய கந்தையா இராசநாயகம்,கந்தையா கோணேஸ்வரன் போன்ற தயாரிப்பாளர்கள் சிறந்த தயாரிப்பாளர்களுக்கு உதாரணம் துணிந்து தயாரிப்புக்குதவியமைக்கு  பாராட்டுக்கள்.


காத்திரமான நம்மவர் படைப்பாக வருவது உறுதி நம்மவர்களுக்கு நாமே கைகொடுக்க வேண்டும் இளைஞர்களின் கனவு நிறைவேற வாழ்த்துவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget