மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-மஹதிவுல்வெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் இளைஞரொருவரின் சடலம் இன்று (21) தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜித் பிரியந்த திசாநாயக்க (21வயது) எனவும் தெரியவருகின்றது.


 மஹதிவுல்வெவ -கிபுல்பொக்க குளத்துக்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.


இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.ரூமி சடலத்தைப் பார்வையிட்டதுடன் குறித்த சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டார்.


இருந்த போதிலும் குறித்த இளைஞரின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும் குடும்பத்தில் ஏற்பட்டபிரச்சினை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்ததாகவும் வழமைபோன்று குளத்திற்கு குளிக்க சென்று வீடு திரும்பவில்லை என குளத்துக்கு சென்று தேடியபோது குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.


சடலத்தை பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


0 கருத்துகள் இல்லை :

Post a Comment

​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :Blogger
பதிப்புரிமை © 2023. Trinco Media -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.